மும்பை மட்டும் பைனலுக்கு வரவேண்டாம்… சென்னை அணி கோச் டுவெய்ன் ப்ராவோ பேட்டி!

Webdunia
வியாழன், 25 மே 2023 (08:15 IST)
நேற்று முன் தினம் நடந்த ஐபிஎல் குவாலிஃபயர் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி பெரும் வெற்றி பெற்று இறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளது. இந்த வெற்றிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் ஒவ்வொருவரும் தனது பங்கை ஆற்றியுள்ளனர். இதன் மூலம் 10 ஆவது முறையாக பைனல்ஸுக்கு சிஎஸ்கே அணி சென்றுள்ளது.

இந்நிலையில் அந்த அணியின் பவுலிங் கோச் டுவெய்ன் ப்ராவோ பைனலுக்கு தங்களை எதிர்த்து விளையாட மும்பை இந்தியன்ஸ் அணி மட்டும் வரவேண்டாம் எனக் கூறியுள்ளார். இது சம்மந்தமாக அவர் “நாக் அவுட் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியை வெல்வது மிக கடினம். அந்த அணியின் மேல் எனக்கு பயம் உண்டு. அதற்காக மற்ற அணிகளை வெல்வது எளிது என்று அர்த்தம் இல்லை. நாங்கள் இப்போது ப்ளே ஆஃப் சென்றுவிட்டதால் மற்ற மூன்று அணிகளுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்