சிஎஸ்கே அணி பற்றி ட்வீட் செய்த ரெய்னா!

புதன், 24 மே 2023 (12:33 IST)
நேற்று நடந்த ஐபிஎல் குவாலிஃபயர் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி பெரும் வெற்றி பெற்று இறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளது. இந்த வெற்றிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் ஒவ்வொருவரும் தனது பங்கை ஆற்றியுள்ளனர். இதன் மூலம் 10 ஆவது முறையாக பைனல்ஸுக்கு சிஎஸ்கே அணி சென்றுள்ளது.

இந்நிலையில் சென்னை அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சிஎஸ்கேவின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக ட்வீட் செய்துள்ளது வைரல் ஆகி வருகிறது. அதில் “சாம்பியன்ஸ் திரும்ப வந்துட்டோம். கர்ஜனையோடு சிஎஸ்கே அணி பைனல்ஸுக்கு சென்றுள்ளது. பரபரப்பான குவாலிபையர் போட்டி.  ஒட்டுமொத்த அணிக்கும் வாழ்த்துக்கள். பைனல்ஸில் வித்தையைக் காட்டி கோப்பையை வெல்ல நேரம் வந்துவிட்டது” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்