310 ரன்கள் இலக்கு.. ஏமாற்றிய வைபவ் சூர்யவன்ஷி.. இந்தியா U-19க்கு வெற்றி கிடைக்குமா?

Siva

செவ்வாய், 22 ஜூலை 2025 (09:31 IST)
19 வயதுக்குட்பட்டோருக்கான இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இப்போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 81 ஓவர்களில் 309 ரன்கள் குவித்துள்ளது. அந்த அணியின் ஏகான்ஸ் சிங் 117 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
 
310 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வரும் நிலையில், 
ஆட்டத்தின் தொடக்கத்தில், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சூர்யவம்சி ஏமாற்றத்தை அளித்து ஆட்டமிழந்தது, இந்திய ரசிகர்களிடையே சற்று ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. சூர்யவம்சி போன்ற அதிரடி பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை குவித்தால் மட்டுமே 310 ரன்கள் என்ற இலக்கை எட்டுவது சாத்தியம் என்ற நிலை இருந்தது. ஆனால் அவர் 20 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
 
இருப்பினும், தற்போது களத்தில் உள்ள இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன்களான கேப்டன் ஆயுஷ் மற்றும் விஹால் மல்ஹோத்ரா  ஆகியோர் சிறப்பாக விளையாடி வருகின்றனர். சற்றுமுன் நிலவரப்படி, இந்தியா 9 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 51 ரன்கள் எடுத்துள்ளது.
 
நாளையுடன் இந்த டெஸ்ட் போட்டி முடிவடைய இருக்கும் நிலையில், சூர்யவம்சி அவுட் ஆனது ஏமாற்றத்தை அளித்தாலும், தற்போது விளையாடி வரும் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருவதால், இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்