அம்பி to அந்நியன்… ஒல்லியான தோற்றத்தில் ஃபிட்டாகக் காணப்படும் சர்பராஸ் கான்!

vinoth

திங்கள், 21 ஜூலை 2025 (14:43 IST)
இந்திய டெஸ்ட் அணியில் நீண்டகாலமாக வாய்ப்புக்காகக் காத்திருந்தார் சர்பராஸ் கான். ரஞ்சிப் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதும் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதையடுத்து சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரில் சில போட்டிகளில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றார்.

அந்த தொடரில்  சில அரைசதங்களை அடித்துக் கலக்கினார். அதையடுத்து தற்போது நடந்து வரும் நியுசிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் சிறப்பாக செயல்பட்டார். ஆனால் ஆஸி அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை.

அவர் மேல் வைக்கப்பட்ட விமர்சனங்களில் ஒன்றாக இருந்தது அவரின்  உடல் எடை. அவர் மிகவும் குண்டாக இருப்பதாக (அது அவரின் ஆட்டத்திறனை பாதிக்காத போதும்) விமர்சனங்கள் வைக்கப்பட்டன. இந்நிலையில் தற்போது உடல் எடையைப் பெருமளவு குறைத்து சர்பராஸ் கான் ஒல்லியான தோற்றத்துக்கு மாறியுள்ளார். இது சம்மந்தமான புகைப்படத்தை அவர் இணையத்தில் பகிர அது வைரல் ஆகி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்