இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டி… விளையாடும் 11 வீரர்களை அறிவித்த இங்கிலாந்து!

vinoth

செவ்வாய், 22 ஜூலை 2025 (10:06 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடக்கும் ‘ஆண்டர்சன் –டெண்டுல்கர்’ தொடரில் மூன்று போட்டிகள் முடிந்துள்ளன. இதில் இங்கிலாந்து அணி இரண்டு போட்டிகளையும் இந்தியா ஒரு போட்டியையும் வென்றுள்ளது. அடுத்த போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் ட்ரஃபோட் மைதானத்தில் நடக்கவுள்ளது.

இந்த போட்டி இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானப் போட்டி. இதில் வெற்றி பெற்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது. இந்த போட்டியில் தோற்கும் பட்சத்தில் இந்திய அணி தொடரை இழக்க நேரிடும். இதற்கிடையில் இந்திய அணியில் ரிஷப் பண்ட், அர்ஷ்தீப், ஆகாஷ் தீப் மற்றும் நிதிஷ்குமார் ஆகியோர் காயமடைந்துள்ளது இந்திய அணிக்குப் பின்னடைவாக அமைந்துள்ளது.

இந்நிலையில் நாளை நடக்கவுள்ள டெஸ்ட் போட்டிக்கான ஆடும் பதினொர் பேர் கொண்ட அணியை இங்கிலாந்து அறிவித்துள்ளது.

இங்கிலாந்து அணி
பென் ஸ்டோக்ஸ்(கேப்டன்), ஸாக் கிராவ்லி, ஜோ ரூட், பென் டக்கெட், ஓலி போப், ஹாரி ப்ரூக், ஜேமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், ப்ரைடன் கார்ஸ், ஆர்ச்சர், லியாம் டாவ்ஸன்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்