இதுவரை நடந்துள்ள மூன்று சீசன்களில் நியுசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இரண்டு முறை இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்ற இந்திய அணி சாம்பியன் பட்டத்தை இன்னும் வெல்லவில்லை.
இந்த தொடரின் இறுதிப் போட்டி கிரிக்கெட்டின் மெக்கா என்று வர்ணிக்கப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. அதை சாம்பியன் பட்டம் வெல்லும் அணியின் மைதானத்துக்கு மாற்றவேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்து வருகின்றன. இந்நிலையில் அடுத்த மூன்று சீசன்களுக்கு இறுதிபோட்டி லார்ட்ஸில் தான் நடக்கும் என ஐசிசி அறிவித்துள்ளது.