இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ஹர்திக் பாண்டியாவுக்கும், நடிகை நடாஷாவுக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்துக்கு முன்பே இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் அவர்களுக்கு அகஸ்தியா என்ற மகன் பிறந்தார்.
மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த பாண்ட்யா- நடாஷா திருமண வாழ்வில் கடந்த ஆண்டு விரிசல் எழுந்தது. ஹர்திக்கும் நடாஷாவும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக விவாகரத்தை அறிவித்தனர்.
இந்நிலையில் பாண்ட்யா அடுத்து பிரிட்டனைச் சேர்ந்த பாடகியான ஜாஸ்மின் வாலியாவை டேட் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருவரும் ஒரே நட்சத்திர ஹோட்டலின் நீச்சல் குளத்தருகே எடுத்துக் கொண்டு வெளியிட்ட புகைபடங்கள் இந்த ஊகத்தை கிளப்பின. ஆனால் இரு தரப்புமே அதற்கு விளக்கம் அளிக்கவில்லை.
இந்நிலையில் நேற்று துபாயில் நடந்த இந்தியா பாகிஸ்தான் போட்டியைக் காண ஜாஸ்மின் வந்திருந்தார். இதையடுத்து இப்போது மீண்டும் பாண்ட்யா மற்றும் ஜாஸ்மின் காதல் கிசுகிசுக்கள் பரவ ஆரம்பித்துள்ளன.