சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் நேற்று துபாயில் நடந்த இந்தியா பாகிஸ்தான் போட்டியில் இந்திய அணி மிக எளிதான வெற்றியைப் பெற்றது. இந்த பாகிஸ்தான் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. ஆனால், அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் வரிசையாக சொதப்பினர். இறுதியில், 49.4 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 241 ரன்கள் மட்டுமே எடுத்தது.
சமீபகாலத்தில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட போட்டியாக இந்த போட்டி அமைந்தது. ஓடிடி தளமான ஜியோ ஹாட்ஸ்டாரில் இந்த போட்டிக்கு சுமார் 60 கோடி பார்வைகள் கிடைத்துள்ளன. இந்தியாவில் இருந்து பல பிரபலங்கள் நேரில் சென்று இந்த போட்டியைப் பார்த்து தங்கள் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தான் நடித்த விளம்பர படத்தின் இடைவேளையில் இந்த போட்டியை தொலைக்காட்சியில் தனது குழுவினரோடு அமர்ந்து பார்த்துள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் தற்போது வைரல் ஆகி வருகிறது.