சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் நேற்று துபாயில் நடந்த இந்தியா பாகிஸ்தான் போட்டியில் இந்திய அணி மிக எளிதான வெற்றியைப் பெற்றது. இந்த போட்டியில் பாகிஸ்தான் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. ஆனால், அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் வரிசையாக சொதப்பினர். இறுதியில், 49.4 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 241 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்நிலையில் இந்த போட்டியில் கோலி சதத்தை நெருங்கிக் கொண்டிருந்த போது ஸ்ரேயாஸ் ஐயர் அவுட் ஆனார். அப்போது களத்துக்குள் வந்த ஹர்திக் பாண்ட்யா அதிரடியாக விளையாடத்தொடங்க்கி ஒரு பவுண்டரியை விளாசினார். அப்போது வெற்றிக்குத் தேவைப்படும் ரன்களும் கோலியின் சதத்துக்குத் தேவைப்படும் ரன்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லாமல் இருந்தது. அதனால் பாண்ட்யா பவுண்டரி அடித்தபோது ரசிகர்கள் அதை விரும்பவில்லை. ஆனால் அதன் பின்னர் அவுட் ஆகி அக்ஸர் வந்து சிங்கிள்களாகப் பொறுக்கி கோலி சதமடிக்க உதவினார்.
இந்நிலையில் போட்டி முடிந்த பின்னர் பேசிய அக்ஸர் “நான் விளையாட சென்ற போது பந்து எட்ஜ் ஆகி பவுண்டரி சென்றுவிடக் கூடாது என வேண்டிக்கொண்டேன். தேவைப்படும் ரன்களையும் அவருக்கு சதத்துக்குத் தேவையான ரன்கள் எவ்வளவு என்று கணக்குப் போட்டிக்கொண்டிருந்தேன். மொத்தத்தில் சிறந்த அனுபவமாக இருந்தது” எனக் கூறியுள்ளார்.