இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நேற்று நடந்த நிலையில் அதில் பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்த நிலையில் இதுகுறித்து பாகிஸ்தான் முன்னால் வீரர்க< கடுமையான விமர்சனங்களை செய்து வருகின்றனர்.
அந்த வகையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேக பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நிர்வாகத்தை மூளையில்லாதவர்கள் என்று விமர்சனம் செய்துள்ளார்.
பாகிஸ்தான் தோல்வி அடைந்ததில் எனக்கு எந்த விதமான ஏமாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. ஏனென்றால் என்ன நடக்கும் என்பது எனக்கு முன்பே தெரியும். ஐந்து முழு நேர பவுலர்கள் இன்றி விளையாடினால் இந்த நிலைமைதான் ஏற்படும்.
மற்ற அணிகள் ஐந்து சிறந்த பவுலர்களுடன் விளையாடும் போது நீங்கள் ஏன் ஆல்ரவுண்டர்களை தேர்வு செய்துள்ளீர்கள் என்று எனக்கு தெரியவில்லை. பாகிஸ்தான் அணி நிர்வாகம் மூளையில்லாமல் தெளிவற்ற இருப்பதாக நினைக்கிறேன். இது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது என்று கூறியுள்ளார்.