அதுமட்டுமில்லாமல் ஹர்திக் பாண்ட்யா துணைக் கேப்டன் பொறுப்பில் இருந்தும் நீக்கினர்.கடந்த சில தொடர்களில் ஷுப்மன் கில்லுக்கு துணைக் கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டது. ஆனால் விரைவில் நடக்கவுள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் ஷுப்மன் கில்லுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தொடருக்கும் ஹர்திக் பாண்ட்யாவுக்கு துணைக் கேப்டன் பொறுப்பு வழங்கப்படவில்லை. இதன் மூலம் அவரின் இந்திய அணிக் கேப்டன் கனவு பலிக்காதோ என்ற சூழல்தான் நிலவுகிறது.
இந்நிலையில் ஹர்திக் பாண்ட்யா ஏன் கேப்டன் பதவியில் ஒதுக்கப்படுகிறார் என்பது தனக்கு ஆச்சர்யமளிப்பதாக தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். அதில் “அவர் தலைமையில் இந்திய அணி சிறப்பாகவே செயல்பட்டது. அவர் துணைக் கேப்டனாக இருந்த இருதரப்பு தொடரிலும் இந்தியா வென்றது. ஆனால் பாண்ட்யா நீக்கப்பட்டுள்ளார். அது ஏன் என்பதற்கானக் காரணம் தெரியவில்லை” எனக் கூறியுள்ளார்.