“உலகக் கோப்பை அணியில் இடம்பெறணும்னா இதை செய்ங்க”… ஹர்திக்குக்கு கண்டீஷன் போட்ட ரோஹித் & டிராவிட்!

vinoth
புதன், 17 ஏப்ரல் 2024 (07:29 IST)
குஜராத் டைட்டன்ஸ் அணிக்குக் கேப்டனாக இருந்து வெற்றிகரமாக ஒரு கோப்பையையும் ஒருமுறை இரண்டாம் இடத்துக்கும் அணியை வழிநடத்திச் சென்றார் ஹர்திக் பாண்ட்யா. ஆனால் அவர் திடீரென மும்பை இந்தியன்ஸ் அணியால் வாங்கப்பட்டு அந்த அணிக்கு கேப்டனாக்கப் பட்டார். இந்த முடிவு மும்பை இந்தியன்ஸ் அணி ரசிகர்களுக்கே பிடிக்கவில்லை.

அதனால் அவர் டாஸ் போட செல்லும்போதும், களமிறங்கும் போது அவரை தாக்கி கடுமையாக ஏளனம் செய்து கோஷங்களை எழுப்பி வருகின்றனர். நேற்றைய சி எஸ் கே அணிக்கு எதிரான போட்டியிலும் இது தொடர்ந்தது. அதற்கேற்றார் போல ஹர்திக் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் சொதப்பி வருகிறார். பெரும்பாலான போட்டிகளில் அவர் பந்துவீசுவதே இல்லை.

இந்நிலையில் ஜூன் மாதம் நடக்க உள்ள டி 20 உலகக் கோப்பை அணியில் அவர் இடம்பெற வேண்டுமானால் ஐபிஎல் தொடரில் அதிகளவு பந்துவீச வேண்டும் என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் அவருக்கு அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய டி 20 அணிக்கே கேப்டனாக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட பாண்ட்யா தற்போது அணிக்குள் இடம்பெறுவதே சிக்கலான ஒன்றாக மாறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்