அந்த அணியின் ஷிவம் துபே(66), கேப்டன் ருத்துராஜ் (69) என அரைசதம் அடித்து கலக்க, கடைசி ஓவரில் களமிறங்கிய தோனி 4 பந்துகளில் 20 ரன்களை சேர்த்தார். இதையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் ஷர்மா கடைசி வரை நின்று சதமடித்த போதும் அந்த அணியால் 186 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது.
இந்த தோல்வி குறித்து பேசிய மும்பை அணிக் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா ”என்ன செய்யவேண்டும் என்பதை சொல்வதற்கு சி எஸ் கே அணிக்கு ஸ்டம்புகளுக்குப் பின்னால் ஒரு நபர் இருக்கிறார். அது அவர்களுக்கு பக்கபலமாக இருக்கிறது. அவர்கள் புத்திசாலித்தனமாக செயல்பட்டார்கள். திட்டங்களை துல்லியமாக செயல்படுத்தினர். பதினரா அபாரமாக பந்துவீசினார்” என ஹர்திக் பாண்ட்யா கூறியுள்ளார்.