போட்டிக் கட்டணத்தில் 25 சதவீதம் அபராதம்.. என்ன தவறு செய்தார் இஷாந்த் ஷர்மா!

vinoth

திங்கள், 7 ஏப்ரல் 2025 (15:46 IST)
ஐபிஎல் தொடரின் 18 ஆவது சீசன் தொடங்கி மிகச்சிறப்பாக போய்க் கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் சன் ரைஸர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த அதிரடிக்குப் பெயர் போன SRH அணியை குஜராத் அணி பவுலர்கள் 152 ரன்களில் சுருட்டினர். அதையடுத்து ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 17 ஆவது ஓவரில் இலக்கை எட்டி வெற்றி வாகை சூடியது. குஜராத் அணியில் சிறப்பாகப் பந்துவீசி முகமது சிராஜ் 4 விக்கெட்களை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.

இந்நிலையில் இந்த போட்டியில் விதிகளை மீறி நடந்து கொண்டதாக குஜராத் அணி பவுலர் இஷாந்த் ஷர்மாவுக்கு 25 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. அவர் என்ன தவறு செய்தார் என்பது அறிவிக்கப்படவில்லை. அவருக்கு ஐபிஎல் விதி 2.2ன் கீழ் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்