பந்து வீச கை இருக்காது தம்பி! – அஸ்வினை மிரட்டிய எதிரணியினர்!

Webdunia
செவ்வாய், 18 பிப்ரவரி 2020 (09:54 IST)
கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொண்டால் பந்து வீச கை இருக்காது என எதிரணியினர் மிரட்டிய சம்பவத்தை அஸ்வின் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியிம் முக்கிய பந்து வீச்சாளர்களில் ஒருவர் அஸ்வின். நியூஸிலாந்து எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட உள்ள அஸ்வின் தனது கடந்த கால அனுபவங்கள் குறித்து பேசியுள்ளார்.

அஸ்வின் தனது 14 வயதில் ஒரு கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ள இருந்திருக்கிறார். அப்போது அவரது வீட்டுக்கு வந்த அஜானுபாகுவான நான்கு பேர் போட்டிக்கு அழைத்து செல்ல வந்திருப்பதாய் கூறி அவரை அழைத்து சென்றுள்ளனர். ஒரு உணவகத்துக்கு அழைத்து சென்று டீ, வடை வாங்கி கொடுத்து விளையாட செல்லக் கூடாது என மிரட்டியுள்ளனர்.

தாங்கள் எதிரணியின் ஆட்கள் என்றும், தங்கள் பேச்சை மீறி கிரிக்கெட் விளையாட சென்றால் பந்து வீச விரல்கள் இருக்காது என்றும் மிரட்டியுள்ளனர். அஸ்வின் விளையாட மாட்டேன் என உறுதியளித்த பிறகே அவரை விடுவித்துள்ளனர். தனது இந்த பால்ய காலத்து அனுபவத்தை ரசிகர்களோடு பகிர்ந்து கொண்டுள்ளார் அஸ்வின்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்