இந்திய ராணுவத்தில் பெண்களுக்கான நிரந்தர கமிஷன் அமைக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவின் மீதான விசாரணையில் பதிலளித்த மத்திய அரசு பெண்கள் குடும்ப பங்களிப்பில் அதிகம் பங்கு வகிக்க வேண்டிய அவசியம் உள்ளதாகவும், ராணுவத்தில் அவர்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படுவதாகவும் கருத்து தெரிவித்திருந்தது.
மத்திய அரசின் இந்த கருத்தை விமர்சித்த நீதிபதிகள் பெண்கள் மீதான பார்வையை அரசு மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும், இதுபோன்ற காரணங்களை காட்டி அவர்களது உரிமைகளை தடுக்க கூடாது என்றும் கூறியுள்ளனர். மேலும் ராணுவத்தில் பெண்களுக்கு நிரந்தர கமிஷன் அமைக்கவும், ஆண்களுக்கு உயர் பதவிகள் வழங்குவது போலவே பெண்களுக்கும் வழங்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.