‘பிரித்வி ஷா மாதிரி அழப் போகிறாய்’… ஜெய்ஸ்வாலை எச்சரிக்கும் முன்னாள் பாக் வீரர்!

vinoth

வியாழன், 10 ஏப்ரல் 2025 (15:03 IST)
இந்திய அணியின் இளம்  வீரரான ஜெய்ஸ்வால் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் மற்ற பேட்ஸ்மேன்கள் சொதப்பினாலும் ஜெய்ஸ்வால் சிறந்த இன்னிங்ஸ்களை ஆடினார் .

டெஸ்ட் போட்டிகளில் அவரின் மிகச்சிறந்த ஆட்டங்களால் வர்ணனையாளர்கள் அவரை ‘நியு கிங்’ என புகழ்த் தொடங்கியுள்ளனர். அதன் மூலம் கோலிக்குப் பிறகு இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரை வழிநடத்தப்போகும் புதிய பேட்ஸ்மேனாக உருவாகிவிட்டார் ஜெய்ஸ்வால் என இப்போதே கருத்துகள் எழ ஆரம்பித்துள்ளன. விரைவில் அவர் ஒரு நாள் போட்டிகளிலும் தனக்கான இடத்தை வலுப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் இந்த சீசன் ஐபிஎல் தொடரில் அவர் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை விளையாடிய ஒரே ஒரு அரைசதம் தவிர்த்து அவர் சொல்லிக் கொள்ளும்படி விளையாடவில்லை. இந்நிலையில் முன்னாள் பாகிஸ்தான் வீரர் பாஸித் அலி ஜெய்ஸ்வாலை எச்சரிக்கும் விதமாக பேசியுள்ளார். அதில் “ஜெய்ஸ்வாலின் பசி தீர்ந்து வயிறு நிறைந்துவிட்டது. இப்போது அவர் கவனம் கிரிக்கெட் மேல் இல்லை. நான் அவரிடம் வெளிப்படையாக சொல்கிறேன் ‘கிரிக்கெட் உன்னை அழவைக்கும். பிரித்வி ஷாவைப் பார். கிரிக்கெட் மீதான உனது காதலை வெளிப்படுத்து” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்