ஐபிஎல் போட்டியில் விளையாடி வந்த ருதுராஜ் கெய்க்வாட் வெளியேறும் நிலையில் இனி சிஎஸ்கே கேப்டனாக தோனி தொடர்வார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடர் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பரிதாபகரமான நிலையிலேயே விளையாடி வருகிறது. முதல் போட்டியில் மும்பையை வென்ற பிறகிலிருந்து இதுவரை ஒரு வெற்றியும் பெறவில்லை
இதனால் ரசிகர்களே சிஎஸ்கேவை விமர்சித்து வரும் நிலையில், சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக மொத்தமாக இந்த தொடரிலிருந்து விலகுகிறார். இனி வரும் போட்டிகளில் அவர் பங்கேற்க மாட்டார் என்பதால், மீண்டும் தோனியை சிஎஸ்கேவின் கேப்டனாக அறிவித்துள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
கடந்த 2022ல் இதேபோல ஜடேஜாவை கேப்டனாக நியமித்தபோது அவர் தடுமாறினார். அதனால் தொடரின் பாதியில் கேப்டனாக பதவியேற்ற தோனி மீண்டும் அணியை சிறப்பாக வழிநடத்தினார். அந்த வகையில் ருத்துராஜ் தலைமையில் மோசமான நிலைக்கு சென்ற அணிக்கு கேப்டனாகும் தோனி, மீண்டும் அணியை சிறப்பாக வழி நடத்தி வெற்றி பெற செய்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Edit by Prasanth.K