ஐபிஎல் மைதானத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் சாம் கரண் சமோசா விற்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.
ஐபிஎல் சீசன் தொடங்கி பரபரப்பாக நடந்து வரும் நிலையில் ஒவ்வொரு போட்டியில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இந்த ஐபிஎல் போட்டிகளில் பல நாட்டு ப்ளேயர்களும் விளையாடி வரும் நிலையில் இங்கிலாந்து அணி வீரரான சாம் கரண் இந்த சீசனில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார்.
சிஎஸ்கே ரசிகர்கள் இவரை சுட்டிக் குழந்தை சாம் கரண் என செல்லமாக அழைப்பதே வழக்கம். இந்நிலையில்தான் ஒரு வீடியோ வேகமகா வைரலாகி வருகிறது. அதில் சாம் கரண் போன்றே தோற்றமுள்ள ஒரு இளைஞர் மைதானத்தில் சமோசா விற்பனையில் ஈடுபட்டுள்ளார். இந்த வீடியோ மும்பை - கொல்கத்தா போட்டியின்போது எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சிஎஸ்கேவுக்காக விளையாடும் சாம் கரண் மும்பை போட்டியில் ஏன் போய் சமோசா விற்கப் போகிறார்? என்ற கேள்வி எழுந்த நிலையில் அவர் யார் என தெரிய வந்துள்ளது. சாம் கரண் போல தோன்றக்கூடிய அவர், பிரபல யூட்யூபர் ஜேக் ஜேக்கின்ஸ். இந்த ஐபிஎல் போட்டியின் பல போட்டிகளையும் கண்டு ரசித்து வரும் இவர் கவனத்தை ஈர்ப்பதற்காக இதுபோல சமோசா விற்று குறும்பு செய்கிறார். ஆனால் அவரை சாம் கரண் என்றே நம்பி பலரும் போட்டோ எடுத்து வருவதுதான் அதற்கு மேல் ஆச்சர்யம்.
Edit by Prasanth.K