இதுநாள் வரை இந்திய அணி பல்வேறு சாதனைகளை புரிந்து வந்தாலும் பகல் – இரவு ஆட்டங்களில் விளையாடுவதை தவிர்த்தே வந்தன. ஸ்டேடிய விளக்குகளின் வெளிச்சத்தில் பிங்க் பந்தில் விளையாடுவது இந்திய அணிக்கு ஆகாத காரியமாக இருந்தது. இந்நிலையில் பிசிசிஐ தலைவராக பதவியேற்ற கங்குலி முதன்முறையாக வங்கதேசத்துடனான ஆட்டத்தின் போது பகல் – இரவு ஆட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
இந்திய அணி விளையாடிய முதல் பகல் – இரவு போட்டியான அதில் வங்க தேசத்தை வீழ்த்தி சாதனை படைத்தது இந்தியா. இதை தொடர்ந்து ஒவ்வொரு தொடரிலும் ஒரு ஆட்டமாவது பகல் – இரவாக நடத்த முயற்சிகள் மேற்கொள்வதாக கங்குலி தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த ஆண்டின் இறுதியில் ஆஸ்திரேலிய அணியுடன் நடக்க இருக்கு தொடரில் ஒரு ஆட்டத்தை பகல் –இரவாக ஆடுவதாக கங்குலி தெரிவித்துள்ளார்.
பிங்க் பந்து இந்தியாவுக்கு புதிது என்றாலும் ஆஸ்திரேலிய அணிக்கு அது பழக்கமானது. இதுவரை ஆஸ்திரேலிய விளையாடிய 7 பிங்க் பந்து ஆட்டங்களில் முழுவதிலும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் இந்த ஆண்டின் இறுதியில் இந்தியா – ஆஸ்திரேலியா இடையே நடக்கும் பகல் – இரவு ஆட்டம் மிகவும் கடுமையானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.