தோனி பிறந்தநாளில் அஸ்வின் சர்ச்சை ட்வீட்!

Webdunia
சனி, 8 ஜூலை 2023 (08:56 IST)
நேற்று ஜுலை 7 ஆம் தேதி இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவரான தோனியின் 42 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு அவரோடு விளையாடிய சக கிரிக்கெட் வீரர்கள் அவருக்கு வாழ்த்துகளைப் பகிர்ந்தனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனியோடு பல ஆண்டுகள் விளையாடிய அஸ்வின் தோனி பிறந்தநாளை முன்னிட்டு “ஜூலை 7 ஆம் தேதி நான் சிறந்த மனிதருக்கு வாழ்த்து சொல்லாமல் ட்வீட் போட்டால் பெரிய சிக்கலில் மாட்டிக் கொள்வேன்.  இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மகி பாய்.

நான் யாருக்கும் பிறந்தநாள் வாழ்த்து சொல்லி ட்வீட் போடமாட்டேன்.  நேரடியாக சந்தித்தோ அல்லது அழைத்தோ அவர்களுக்கு வாழ்த்து சொல்வதே என் பழக்கம்.

இந்த பின் குறிப்பு வதந்திகளை பரப்புவர்களுக்கும், கதைக் கட்டுபவர்களுக்கும்தான்” என ட்வீட் செய்ய, யாரை குறிப்பிட்டு அஸ்வின் இப்படி ட்வீட் செய்துள்ளார் எனக் கேள்விகள் எழுந்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்