தனது கிரிக்கெட் வாழ்க்கையின் இறுதியில் இருக்கும் இஷாந்த் சர்மா சமீபத்தில் தன்னுடைய முன்னாள் கேப்டன் தோனி குறித்து பகிர்ந்த தகவல்கள் கவனம் பெற்றுள்ளனர். அதில் அவர் “தோனிக்கு அரிதாக சில நேரங்களில் கோபம் வரும். ஒருமுறை நான் பந்துவீசிவிட்டு சோர்வாக இருந்தபோது உனக்கு வயதாகிவிட்டது. களத்தை விட்டு வெளியேறிவிடு எனக் கோபமாக சொன்னார். இன்னொருமுறை என்னிடம் பந்தை எறியும் போது அவரின் கோபத்தைப் பார்த்தேன்” எனக் கூறியுள்ளார்.