இப்படத்தில் அதிதி ஷங்கர் நடிக்க, வில்லனாக இயக்குனர் மிஷ்கின, மூத்த நடிகை சரிதா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனத்துக்காக அருண் விஷ்வா தயாரிக்க மண்டேலா படத்துக்கு இசையமைத்த பரத் ஷங்கர் இசையமைக்கிறார்.
இந்த நிலையில், மாவீரன் படம் வரும் ஜூலை 14 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில், ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் டாம் குரூஸ் நடிப்பில் உருவாகியுள்ள மிஸன் இம்பாசிபில் என்ற படம் வரும் ஜூலை 12 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.
இதுகுறித்து, பிரபல சினிமா விமர்சகர் புளூ சட்டை மாறன் தன் டுவிட்டர் பக்கத்தில், மாவீரன் இம்மாதம் 14 அன்று வெளியாகும் நிலையில்... 12 ஆம் தேதி டாம் க்ரூஸ் நடித்த Mission Impossible வெளியாகிறது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், மாவீரன் பட தயாரிப்பாளர் அருண் விஸ்வா தன் டுவிட்டர் பக்கத்தில் ரீவிடூட் பதிவிட்டுள்ளார். அதில், வணக்கம் சார். நான் அருண் விஸ்வா, மாவீரன் படத்தோட தயாரிப்பாளர்! எனக்கு என் படம்தான் சார் மிஸன் இம்பாசிபிள், அவதார், ஆர.ஆர்.ஆர். எல்லாமே! உங்க வயசுக்கு இப்படி ஒரு படத்தை ஷேர் பண்ணி இத பண்ணியிருக்க வேண்டாம் சார் என்று தெரிவித்துள்ளார்.