கொரோனா தடுப்பூசியால் மாரடைப்பு அதிகரிக்கும்: அமெரிக்க டாக்டர் அதிர்ச்சி தகவல்

Webdunia
சனி, 8 அக்டோபர் 2022 (12:09 IST)
கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரனோ வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருந்த நிலையில் கிட்டத்தட்ட அனைவருக்கும் கொரோனா வைரஸ் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்தியாவில் 90 சதவீத மக்களுக்குகொரோனா வைரஸ் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டதாகவும், அதேபோல் இரண்டாவது டோஸ் தடுப்பூசியும் அதிக நபர்களுக்கு செலுத்தப்பட்டுவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின
 
இந்த நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு ஊசியால் மாரடைப்பு சார்ந்த மரணம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க டாக்டர் ஒருவர் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் அறுவை சிகிச்சை நிபுணராக உள்ள டாக்டர் ஜோசப் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் பகுப்பாய்வு செய்ததில் தடுப்பூசியால் மாரடைப்பு தொடர்பான மரணம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்று தெரிவித்துள்ளார். அவருடைய இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்