தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,997 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,46,06,460 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் தற்போது 30,362 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,28,754 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,40,47,344 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் நேற்று மட்டும் 3,97,407 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.