US Presidential Election 2024: அமெரிக்க அதிபர் தேர்தல்: டொனால்டு டிரம்ப் முன்னிலை.. கமலா ஹாரிஸ் பின்னடைவு..!

Siva
புதன், 6 நவம்பர் 2024 (07:05 IST)
அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், தற்போது வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் முன்னிலை வகித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

அமெரிக்காவின் 47வது அதிபரை தேர்வு செய்யும் தேர்தல் நேற்று அமைதியாக நடைபெற்றது. தற்போது வாக்கு எண்ணிக்கை தொடங்கி, முன்னிலை விவரங்கள் வெளிவர தொடங்கியுள்ளது.

95 இடங்களில் முன்னிலை மற்றும் 9 மாகாணங்களில் வெற்றி என டொனால்ட் டிரம்ப் உள்ளார் என்பதும், 35 இடங்களில் முன்னிலை மற்றும் நான்கு மாகாணங்களில் வெற்றி பெற்று கமலா ஹாரிஸ் பின்னணியில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் அடுத்த அமெரிக்க அதிபராக டொனால்ட் பதவி ஏற்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும், முழுமையான தேர்தல் முடிவு வந்த பின்னர் தான் எதையும் உறுதியாக கூற முடியும். அமெரிக்க அதிபர் ஆவதற்கு  270 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
  

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்