US Presidential Election: வெற்றியை தீர்மானிக்க போகும் 7 மாகாணங்கள்! ட்ரம்ப் செய்த ட்ரிக் வேலை செய்யுமா?

Prasanth Karthick

செவ்வாய், 5 நவம்பர் 2024 (09:36 IST)

இன்று அமெரிக்காவில் அதிபருக்கான தேர்தல் நடைபெறும் நிலையில் வெற்றி வாய்ப்பு யாருக்கு அதிகம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 

 

அமெரிக்காவில் நடந்து வரும் அதிபருக்கான தேர்தலில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கும், இந்நாள் துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கும் இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. இன்று அதிபர் தேர்தல் தொடங்கி நடந்து வரும் நிலையில் அமெரிக்காவில் உள்ள 7 மாகாணங்கள்தான் வெற்றியை தீர்மானிப்பவையாக உள்ளன.

 

அமெரிக்க நாட்டிற்கு ஹவாய், அலாஸ்கா உள்பட மொத்தம் 50 மாகாணங்கள் உள்ளன. இதில் பெரும்பாலான மாகாணங்களில் காலம் காலமாகவே குடியரசு கட்சிக்கோ அல்லது ஜனநாயக கட்சிக்கோ அதிக வாக்குகள் கிடைப்பது வழக்கமானதாக இருந்து வருகிறது. அவை தவிர்த்து 7 மாகாணங்கள் ஸ்விங் ஸ்டேட்ஸ் எனப்படுகின்றன.

 

இந்த மாகாணங்களில் எப்போது எந்த கட்சி வெல்லும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. அதனால் பொதுவாகவே இங்கு போட்டிகள் கடுமையாக இருக்கும். அதன்படி ஸ்விங் ஸ்டேட்ஸ்களான அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, வட கரோலினா, பென்சில்வேனியா மற்றும் விஸ்கான்ச்ன் ஆகிய மாகாணங்களின் வெற்றி நிலவரமே அதிபரை தேர்வு செய்வதில் முக்கிய திருப்பு முனையாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

ALSO READ: திமுக குடும்ப ஆட்சியை எம்ஜிஆர் அகற்றியதை போல.. விஜய்யும் அகற்றுவார்! - தவெக செய்தி தொடர்பாளர்!
 

முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அவர் அதிபராக இருந்த காலத்திலேயே மெக்ஸிகர்களில் சட்டவிரோத உள்நுழைவை கடுமையாக எதிர்த்தார். மெக்ஸிகர்கள் உள்நுழைவால் அரிசோனா உள்ளிட்ட எல்லையோர பிராந்தியங்களில் உள்ள அதிருப்தியை ட்ரம்ப் தனக்கு சாதகமான வாக்குகளாக மாற்றிக் கொள்ள இயலும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பின்படி, மேற்குறிப்பிட்ட ஸ்விங் ஸ்டேட்ஸ்களில் டொனால்ட் ட்ரம்ப் முன்னிலை வகிக்கிறார்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்