32 வயதில் கொலை செய்தவரை 63 வயதில் கைது செய்த போலீசார்.. காரணம் ஏஐ டெக்னாலஜி..!

Siva

ஞாயிறு, 20 ஏப்ரல் 2025 (16:17 IST)
32 வயதில் கொலை செய்துவிட்டு தலைமறைவான ஒருவரை, 63 வயதில் போலீசார் கைது செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராணிப்பேட்டை அருகே கடந்த 1994 ஆம் ஆண்டு, கொலை வழக்கு ஒன்றில் இரண்டு பேர் குற்றவாளிகள் என அடையாளம் காணப்பட்டனர். இதில் ஒரு குற்றவாளி அப்போதே கைது செய்யப்பட்டு, அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இன்னொரு குற்றவாளி, அசாம் மாநிலத்தைச் சேர்ந்த "பாஸ்கர் ஜோதி" எனக் கண்டுபிடிக்கப்பட்டாலும், அவர் தலைமறைவானதால் அவரை பிடிக்க முடியாமல் இருந்தது.

இந்த நிலையில், தற்போது அந்த வழக்கு தூசி தட்டப்பட்டு மீண்டும் விசாரணை நடத்தப்பட்ட போது, ஏஐ டெக்னாலஜியின் உதவியுடன் 32 வயதிலிருந்த அவர் தற்போது 63 வயதில் எப்படி இருப்பார் என அடையாளம் காணப்பட்டது.

அவருடைய உருவ தோற்றம், ஏஐ டெக்னாலஜி மூலம் உருவாக்கப்பட்ட நிலையில், அவர் அசாம் மாநிலத்தில்தான் இருக்கிறார் என்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் அசாம் சென்ற ராணிப்பேட்டை போலீசார், அவரை கைது செய்தனர்.

அவரை தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்து விசாரணை செய்ய, சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. 32 வயதில் தலைமறைவானவர் 63 வயதில் கைது செய்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்