நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!

Siva

திங்கள், 4 நவம்பர் 2024 (07:12 IST)
நாளை அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், முன்கூட்டியே 6.8 கோடி பேர் வாக்களித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகின் மிக முக்கியமான தேர்தல்களில் ஒன்றாகக் கருதப்படும் அமெரிக்க அதிபர் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், டொனால்ட் டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகிய இருவரும் அதிபர் பதவிக்காக நேருக்கு நேர் மோதுகின்றனர்.

புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நாளை நடைபெற இருக்கும் நிலையில், அமெரிக்க தேர்தல் சட்டங்களின்படி வாக்காளர்கள் தங்களுடைய வாக்குகளை முன்கூட்டியே செலுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தபால் ஓட்டுகள் மட்டுமல்லாமல் தனியாக அமைக்கப்பட்டுள்ள ஓட்டு சாவடிகளிலும் வாக்காளர்கள் தங்களுடைய வாக்குகளை செலுத்த முடியும். வானிலை, மருத்துவம், வெளியூர் பயணம் உள்ளிட்ட சில காரணங்களால் முன்கூட்டியே வாக்களிக்க அனுமதிக்கப்பட்ட நிலையில், பலர் வாக்களித்து வருவதாகவும், வாக்களிக்க நீண்ட வரிசையில் காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் சுமார் 24 கோடி பேர் வாக்களிக்க உள்ள நிலையில், இதில் கிட்டத்தட்ட 25% அதாவது 6.8 கோடி பேர் முன்கூட்டியே தங்களது வாக்குகளை பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.


Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்