ம.தி.மு.கவில் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா - முதன்மை செயலாளர் துரை வைகோ இடையேயான முரண்பாடு முடிவுக்கு வந்துள்ளது.
மல்லை சத்யா ஆதரவாளர்கள் கட்சிக்கு எதிராக செயல்படுவதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்த கட்சியின் முதன்மை செயலாளர் துரை வைகோ, கட்சியிலிருந்து தான் விலகுவதாக ராஜினாமா கடிதம் அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து மதிமுக நிர்வாகிகள் குழுக் கூட்டம் கூடப்பட்டது.
அதில் துரை வைகோ பதவி விலகக்கூடாது என பலரும் வேண்டுகோள் விடுத்த நிலையில், துணைப் பொதுச் செயலாளரான மல்லை சத்யா, தான் கட்சிக்கு விரோதமாக நடந்துக் கொள்ளவில்லை என்றும், தனது செயல்பாடுகள் வருந்தும்படி செய்திருந்தால் மன்னித்துக் கொள்ளும்படியும் துரை வைகோவிடம் கேட்டுள்ளார்.
அதை தொடர்ந்து செய்தியாளர்கள் முன்பு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இருவரையும் சமாதானம் செய்து வைத்தார். இருவரது கைகளையும் அவர் இணைத்து வைத்தார். பின்னர் இருவரும் கட்டிப்பிடித்து பரஸ்பரம் சமாதானத்தை தெரிவித்துக் கொண்டனர்.
Edit by Prasanth.K