100 மீட்டர் ஆழ பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து ! 11 பேர் உயிரிழப்பு

Webdunia
திங்கள், 16 மே 2022 (19:44 IST)
லிமா என்ற நாட்டில் பேருந்து கவிழ்ந்ததில் சுமார் 11 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

பெரு நாட்டில் உள்ள லா லிபர்டாட்டில் இருந்து லிமா நோக்கி பயணிகளை  நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று மலைப்பகுதியில் சென்றபோது, திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து 330 அடி பள்ளத்தாக்கில் விழுந்தது.

லிமாவில்  உள்ள அங்காஷ் என்ற பகுதியில் இந்த விபத்து நடந்தாகவும் இதில் 11 பேர் பலியானார்கள்.34 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்புப் படையினர் காயம் அடைந்தோரை மீட்டு சிகுவாஸ் மருத்துவமனையில்  சேர்த்தனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்