தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் கூட்டணி.. மாஸ் திட்டம் போடும் தவெக தலைவர் விஜய்..!

Siva

திங்கள், 7 ஜூலை 2025 (18:07 IST)
தனது அரசியல் எதிரி தி.மு.க. என்றும், கொள்கை எதிரி பா.ஜ.க. என்றும், இவ்விரு கட்சிகளுடனும் எந்த காரணத்தைக் கொண்டும் கூட்டணி இல்லை என்று விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஆனால், அ.தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை என்று அவர் சொல்லாமல் இருப்பது, அ.தி.மு.க.வுடன் எதிர்காலத்தில் கூட்டணி இணைய வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
 
வரும் தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில், தேர்தலுக்கு முன் அ.தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை என்றும், தேர்தலுக்குப் பின் தொங்கு சட்டமன்றம் ஏற்பட்டால், அப்போது அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேரலாம் என்றும் விஜய் ஒரு 'மாஸ்டர் பிளான்' போட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
எப்படியும் பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகளில் அ.தி.மு.க. தொண்டர்கள் வேலை செய்ய மாட்டார்கள் என்பதால், பா.ஜ.க. மிகவும் குறைந்த தொகுதிகளில் வெற்றி பெறும் அல்லது வெற்றியே பெறாமல் கூட போகலாம் என்று அரசியல் வட்டாரங்கள் கணிக்கின்றன.
 
தேர்தலுக்குப் பின்னர், அ.தி.மு.க.வுக்கு ஆட்சி அமைக்கத் தேவையான சில இடங்கள் தேவைப்பட்டால், அப்போது கண்டிப்பாக அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து, சில நிபந்தனைகளுடன் முக்கியப் பதவிகளையும் வாங்கிக்கொண்டு விஜய் ஆட்சி அமைக்க உதவுவார் என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்