வட கொரியாவில் கடந்த வாரம் ஒரே ஒருவருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது என்றும் அந்த ஒருவரும் பலியாகி விட்டதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் இந்த வாரம் வடகொரியாவில் மொத்தம் எட்டு லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா பாதிக்கப்பட்டிருப்பதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சர்வாதிகாரியாக வட கொரியாவில் ஆட்சி நடத்திவரும் கிம்ஜ்ச்ச்ன், அந்நாட்டில் என்ன நடக்கிறது என்பதை வெளியுலகுக்கு தெரியாமல் வைத்துள்ளார். இந்த நிலையில் கடந்த வாரம் ஒரே ஒருவருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு என வடகொரியா அதிகாரபூர்வமாக அறிவித்த நிலையில் தற்போது 3 நாட்களில் மட்டும் எட்டு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒருபக்கம் தொற்று அதிகரித்தாலும் இதுவரை தடுப்பூசி பயன்பாடு குறித்து எந்த முடிவினையும் அதிபர் கிம் அரசு மேற்கொள்ளவில்லை. வடகொரியாவுக்கு தேவைப்படும் தடுப்பூசி மருந்தை தர தயார் என்று சீனாவும் தென்கொரியாவும் விருப்பம் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த மனிதாபிமான உதவிகளை வடகொரியா அரசு தற்போது வரை ஏற்றுக் கொள்ளாமல் மவுனம் சாதித்து வருகிறது.