22 சதவீதம் உயர்ந்த பேருந்து கட்டணம்; அதிர்ச்சியில் மக்கள்!

Webdunia
வெள்ளி, 1 ஜூலை 2022 (08:33 IST)
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களுக்கு கடும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. நாள்தோறும் பெட்ரோல் பங்குகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பெட்ரோல் விலையும் அதிகமாக இருப்பதால் பலரும் பொது போக்குவரத்து சாதனமான பேருந்தை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க பேருந்து கட்டணத்தை 22 சதவீதம் உயர்த்துவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. இதனால் குறைந்தபட்ச பேருந்து கட்டணமே 40 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு இது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்