இன்டெல் நிறுவனம் செலவை குறைக்கும் நடவடிக்கையை தொடங்கியுள்ள நிலையில், முதல் கட்டமாக 529 ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. நிறுவனத்தின் சிக்கல்களை அகற்றுவது, செயல்திறனை வலுப்படுத்துவது, லாபத்தை நோக்கி நிறுவனத்தை கொண்டு செல்வது ஆகியவற்றிற்காக செலவுகளைக் குறைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருப்பதாக இன்டெல் நிறுவனம் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.
இந்த வேலைநீக்க நடவடிக்கையால் சிப் தயாரிப்பு வல்லுநர்கள், கிளவுட் மென்பொருள் வல்லுநர்கள், பொறியாளர்கள் உட்பட சில முக்கிய பதவிகள் காலியாகும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
வேலை நீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு 60 நாள் நோட்டீஸ் அல்லது குறைந்த நான்கு வார நோட்டீஸ் வழங்கப்படும் என்றும், ஒன்பது வார ஊதியம் மற்றும் சலுகைகள் வழங்கப்படும் என்றும் இன்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.