5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

Prasanth K

வியாழன், 10 ஜூலை 2025 (15:10 IST)

அடுத்த இரண்டு நாட்களுக்கு சில பகுதிகளில் வெப்ப அதிகரிப்பும், அதன் பின்னர் சில இடங்களில் மிதமான அளவில் மழைக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று மற்றும் நாளை தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், காரைக்கால், புதுச்சேரி பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்ப்ய்ள்ளது. மற்ற இடங்களில் சில பகுதிகளில் வெப்பநிலை இயல்பை விட 2-4 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.

 

12ம் தேதி முதல் 17ம் தேதி வரை தமிழகத்தின் சில பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் சில பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான அளவிலான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

 

இன்று முதல் 14ம் தேதி வரை தென் தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடாவில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க இப்பகுதிகளுக்குள் செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்