ஒடிசா மாநிலம் ஜாஜ்பூரில், பிரிந்து வாழ்ந்த மனைவியின் கழுத்தை அறுத்த கணவர், அவரது கள்ளக்காதலனின் பிறப்புறுப்பை கூர்மையான ஆயுதத்தால் சிதைத்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து மனைவியின் இருப்பிடம் சென்ற மனோஜ் குமார், மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்தார். அதன்பின் அவரது கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு கடுமையாக சிதைத்துள்ளார். இருவரும் தற்போது ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டு, தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மனோஜ்குமார் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அவரை கண்டுபிடிக்கத் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.