கடனை திருப்பி செலுத்த கடன் வாங்கும் பாகிஸ்தான்: இன்னொரு இலங்கையா?
வெள்ளி, 24 ஜூன் 2022 (14:21 IST)
ஏற்கனவே வாங்கிய கடனை திருப்பிச் செலுத்துவதற்காக சீனாவிடம் 2.3 பில்லியன் டாலர் பாகிஸ்தான் கடன் வாங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தானில் தற்போது திறமையற்ற ஆட்சியாளர்கள் இருப்பதால் ஏற்கனவே வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த மீண்டும் கடன் வாங்குகிறார்கள் என பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் தனது கட்டுரையில் எழுதி உள்ளார்
வேறு எந்த நாடும் இனிமேல் பாகிஸ்தானிற்கும் கடன் கொடுக்காது என்ற சூழ்நிலையில் ஒரே நட்பு நாடான சீனாவிடம் பாகிஸ்தான் 2.3 பில்லியன் கடன் வாங்கியுள்ளதாக அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதே ரீதியில் சென்றால் இலங்கை போல் பாகிஸ்தான் நாடும் திவாலாகும் வாய்ப்பு இருப்பதாகவும் பாகிஸ்தானில் திறமையான ஆட்சியாளர்கள் வந்தால் மட்டுமே இந்த நிலை மாறும் என்றும் அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது