ஜூலை 10 வரை அத்தியாவசிய தேவைக்கு மட்டும் எரிபொருள்! – இலங்கை நெருக்கடி!

செவ்வாய், 28 ஜூன் 2022 (08:13 IST)
இலங்கையில் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பெட்ரோல் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி அதிகமான நிலையில் ஏற்றுமதி, இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளதால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அன்றாடம் உணவுக்கே அல்லாடிய நிலையில் கொதித்தெழுந்த மக்கள் அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தினர்.

இதனால் மகிந்த ராஜபக்சே பதவியிலிருந்து விலகி ரணில் விக்ரமசிங்கெ பிரதமரானார். அதுமுதல் பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதே சமயம் பொருட்கள் கிடைப்பதில் கடும் கட்டுப்பாடுகளும் உள்ளன.

தற்போது இலங்கையில் ஜூலை 10ம் தேதி வரை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் பெட்ரோல், டீசல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜூலை 10ம் தேதிவரை நகர்புற கல்வி நிலையங்கள் இயங்காது என்றும், பிற சேவைகளும் முடக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்