வழி தவறிய ராக்கெட்; அடுத்த மாதம் நிலவில் மோதும்! – நாசா விஞ்ஞானிகள் தகவல்!

Webdunia
செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (08:29 IST)
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்ணில் செலுத்திய ராக்கெட் வழி தவறியதால் நிலவில் மோத உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் கடந்த சில காலமாக விண்வெளி ஆராய்ச்சியில் தீவிரம் காட்டி வருகிறது. ஸ்பேஸ் எக்ஸின் ராக்கெட்டுகள் பல செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வருகின்றன. அந்த வகையில் கடந்த 2015ம் ஆண்டு காலநிலை மாற்றத்தை ஆய்வு செய்ய செயற்கைக்கோள் ஒன்று ஸ்பேஸ் எக்ஸால் விண்ணில் செலுத்தப்பட்டது.

செயற்கைக்கோளை விண்ணில் செலுத்திய ராக்கெட் பூமிக்கு திரும்புவதற்கு பதிலாக திசைமாற்றி ஈர்ப்புவிசையை விட்டு வெளியேறி விண்ணில் சுற்றி வருகிறது. தற்போது இந்த ராக்கெட்டின் ஒரு பகுதி நிலவை நோக்கி மணிக்கு 9,000 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்து வருவதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த ராக்கெட் அடுத்த மாதத்தில் நிலவின் இருண்ட பக்கத்தில் மோதும் என கணிக்கப்பட்டுள்ளது. நிலவின் இருண்ட பகுதியை நாம் காண முடியாது என்பதால் இந்த நிகழ்வை காண முடியாது என்றும், ஆனால் இதனால் எந்த பாதிப்பும் இருக்காது என்று வானியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்