வசூல் ராஜா பாணியில் கட்டிப்பிடி வைத்தியம் செய்யும் இளைஞர்… கட்டணம்தான் கொஞ்சம் காஸ்ட்லி!

Webdunia
வெள்ளி, 15 ஜூலை 2022 (09:25 IST)
இங்கிலாந்தில் வசிக்கும் கனடா நாட்டை பூர்வீகமாக கொண்ட இந்த இளைஞர் சமூகவலைதளங்களில் இப்போது கவனம் பெற்றுள்ளார்.

இங்கிலாந்தில் வசிக்கும் கனடாவை சேர்ந்த ட்ராவர் ஹூர்ட்டன் என்ற 30 வயது இளைஞர் ஒரு மணிநேரம் கட்டிப்பிடிப்பதற்காக இந்திய மதிப்பில் 7000 ரூபாய் வரை வசூலிக்கிறாராம். வசூல் ராஜா படத்தில் வரும் கட்டிப்பிடி வைத்தியம் போல இந்த இளைஞரின் தெரபிகள் அமைவதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக அவர் இப்போது சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளார்.

தன்னுடைய சேவை குறித்து பேசியுள்ள ஹூர்ட்டன் "உறவுகளை உருவாக்க பலர் போராடுகிறார்கள், அங்குதான் நான் அடியெடுத்து வைக்கிறேன் - இது அரவணைப்பதை விட அதிகம், அது மக்களுக்குத் தேவையான விஷயங்களைக் கொடுக்கிறது, அது எதுவாக இருந்தாலும். பலரும் என்னிடம் என்னை செக்ஸ் வொர்க்கர் என்று தவறாக புரிந்துகொண்டு பேசியுள்ளனர்.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்