பழைய பஸ் பாஸ் வைத்திருந்தாலும் இலவசமாக பயணிக்கலாம்..! – போக்குவரத்துத்துறை அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 15 ஜூலை 2022 (09:08 IST)
தமிழ்நாடு அரசு பேருந்துகளில் பள்ளி மாணவர்கள் பழைய பாஸ் வைத்திருந்தாலும் இலவசமாக பயணிக்க அனுமதிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக கடந்த சில ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் கடந்த ஆண்டு முதலாக தொடங்கி நடந்து வருகின்றன. மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் முடிந்து பள்ளிகள் மீண்டும் தொடங்கி நடந்து வருகின்றன.

இந்நிலையில் வெளியூரிலிருந்து அரசு பேருந்துகள் மூலமாக பள்ளி செல்லும் மாணவர்கள் சில பகுதிகளில் நடத்துனர்களால் கீழே இறக்கி விடப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. இதையடுத்து போக்குவரத்துத்துறை நடத்துனர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில் பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவர்களை பேருந்தில் பயணிக்க அனுமதிக்காத நடத்துனர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

மேலும், பள்ளி மாணவர்கள் சீருடை அணிந்திருந்தாலும், அல்லது 2019-20 கல்வி ஆண்டில் வழங்கப்பட்ட பஸ் பாஸ் வைத்திருந்தாலும் கூட அவர்களை பேருந்தில் இலவசமாக பயணிக்க நடத்துனர்கள் அனுமதிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்