ஒமிக்ரான் வைரஸ் எதிரொலி: உயர்ந்தது விமான கட்டணங்கள்!!

Webdunia
புதன், 1 டிசம்பர் 2021 (14:59 IST)
ஒமிக்ரான் வைரஸ் காரணமாக பல்வேறு நாடுகளுக்கான விமான கட்டணங்களை விமான நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. 

 
உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வரும் நிலையில் பல்வேறு வகை வீரியமடைந்த கொரோனா வைரஸ்களால் உலகம் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவிலிருந்து பரவ தொடங்கியுள்ள வீரியமிக்க கொரோனாவான ஒமிக்ரான் வேகமாக பரவக்கூடியது என்பதால் உலக நாடுகள் பீதியில் ஆழ்ந்துள்ளன.
 
இதனால் சர்வதேச விமான சேவைகளை பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு நாடுகளுக்கான விமான கட்டணங்களை விமான நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. அதன்படி டெல்லியில் இருந்து கனடாவின் டொரன்டோ நகருக்கு இதுவரை இருந்த குறைந்தபட்ச கட்டணம் 80,000 ரூபாயில் இருந்து 2,37,000 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
 
டெல்லியில் இருந்து லண்டனுக்கு இதுவரை 60,000 ரூபாயாக இருந்த பயண கட்டணம், 1,20,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பிசினஸ் வகுப்பு டிக்கெட்டுகள் ரூ.6 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் பல்வேறு நகரங்களுக்கு இடையிலான விமான கட்டணம் 2 முதல் 3 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்