சக மாணவர்களை சரமாரியாக சுட்டுக் கொன்ற சிறுவன்! – அமெரிக்காவில் அதிர்ச்சி!

Webdunia
புதன், 1 டிசம்பர் 2021 (14:38 IST)
அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் 15 வயது பள்ளி சிறுவன் சக மாணவர்களை சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் டெட்ராய்ட் அருகே உயர்நிலை பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் 15 வயது சிறுவன் துப்பாக்கியை கொண்டு வந்ததுடன் அதை வைத்து மாணவர்களையும், ஆசிரியர்களையும் சரமாரியாக சுட்டதில் 3 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். 8 பேர் படுகாயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் இந்த துப்பாக்கிசூடு சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டனங்களும், வருத்தமும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்