அறுவை சிகிச்சையின் போது டிக்டாக்… மருத்துவருக்கு விதிக்கப்பட்ட தடை!

புதன், 1 டிசம்பர் 2021 (11:19 IST)
ஆஸ்திரேலியாவில் அறுவை சிகிச்சையின் போது டிக்டாக் மற்றும் செல்பி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்த மருத்துவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணராக இருப்பவர் டேனியல் அரோனோவ் என்பவர் டிக்டாக்கில் பிளாஸ்டிக் சர்ஜரி பற்றிய தகவல்களை கூறி 13 மில்லியன் பாலோயர்களை பெற்றுள்ளார். ஆனால் இவர் அறுவை சிகிச்சையின் போது முழுக்கவனத்தையும் அதில் செலுத்தாமல் டிக்டாக் வீடியோ எடுப்பது, செல்பி எடுப்பது, நடனமாடுவது மற்றும் நோயாளிகளின் அனுமதி இன்றி அறுவை சிகிச்சை வீடியோக்களை வெளியிடுவது என்று ஈடுபட்டு வந்ததால் அவர் மீதான குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்நிலையில் இப்போது அரோனாவுக்கு ஆஸ்திரேலியாவின் சுகாதார பயிற்சியாளர் ஒழுங்குமுறை ஆணையம் மருத்துவராக தொடர்ந்து செயல்பட தடை விதித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்