சீக்கிய கோவிலில் பாகிஸ்தான் அழகி போட்டோஷூட்! – இந்தியா அதிருப்தி!
புதன், 1 டிசம்பர் 2021 (12:27 IST)
பாகிஸ்தானில் உள்ள சீக்கிய கோவிலில் பாகிஸ்தான் அழகி ஒருவர் போட்டோஷூட் நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானுக்கு உட்பட்ட பஞ்சாப் மாகாணத்தின் கர்தார்பூர் பகுதியில் சீக்கிய புனித தலமான குருத்வாரா தர்பார் சாஹிப் அமைந்துள்ளது. சீக்கியர்கள் ஆண்டுதோறும் இந்த கோவிலுக்கு சென்று வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்நிலையில் சமீபத்தில் பாகிஸ்தான் அழகி சௌலேஹா என்பவர் இந்த புனிதத்தலம் முன்பாக போட்டோஷூட் நடத்தியுள்ளார். குருத்வாரா கோவிலுக்கு செல்பவர்கள் தலை முடி தெரியாத அளவு மூடியிருக்க வேண்டும் என நிபந்தனை உள்ள நிலையில் சௌலேஹா தலைமுடி காற்றில் பறக்க போஸ் கொடுத்து எடுத்த போட்டோ சீக்கியர்களின் கண்டத்தை பெற்றது.
இந்நிலையில் அந்த புகைப்படங்களை நீக்கிய சௌலேஹா தனது செயலுக்கு மன்னிப்பும் கோரியுள்ளார். இந்நிலையில் பாகிஸ்தான் தூதரை அழைத்து பேசிய இந்தியா, பாகிஸ்தானில் நடந்த அந்த சம்பவத்திற்கு தனது அதிருப்தியை தெரிவித்துள்ளது.