ஆணுறுப்பில் சிக்கிய வளையத்தை மீட்க ஆறு மணி நேரம் போராடிய டாக்டர்கள்

Webdunia
புதன், 3 ஜனவரி 2018 (01:10 IST)
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த Suffolk என்ற பகுதியை சேர்ந்த ஒருவர் விளையாட்டுத்தனமாக இரும்பு வளையம் ஒன்றை தனது ஆணுறுப்பில் மாட்டியுள்ளார். பின்னர் அதை வெளியே எடுக்க முயன்றபோது அந்த வளையம் வெளியே வரவில்லை

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் மருத்துவர்களின் உதவியை நாடினார். சுமார் பத்து மருத்துவர்கள், 6 மணி நேரம் போராடி அந்த வளையத்தை கவனமாக வெட்டி அந்த இளைஞருக்கு நிம்மதி பெருமூச்சை தந்தனர்

அந்த இளைஞர் குறித்த விபரங்களை டாக்டர்களும், போலீசாரும் பத்திரிகையாளர்களிடம் தெரிவிக்க மறுத்தனர். இருப்பினும் இதுபோன்ற விபரீத செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்