சென்னை மெட்ரோ ரயில் திட்டம் 1 மற்றும் 2-ஆம் கட்டங்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதை கருத்தில் கொண்டு, 118.9 கி.மீ நீளத்திலான புதிய 3 வழித்தடங்களில் 128 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்படும். இந்தப் பணிகள் தற்போது முழு தீவிரத்தில் நடைபெற்று வருகின்றன.
பூந்தமல்லி பணிமனை நிலையத்திலிருந்து கலங்கரை விளக்கம் வரை 26.1 கி.மீ நீளத்திற்கு மேல், போரூர் வரையிலான பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இதன் ஒரு பகுதியாக, இம்மாத இறுதியில், 2-ஆம் கட்ட சோதனை ஓட்டம் பூந்தமல்லி பணிமனை முதல் போரூர் வரை 9 கி.மீ தூரத்திற்கு நடக்கவுள்ளது.