5000 ரூபாய் சம்பளத்திற்காக குவியும் இன்ஜினியரிங் பட்டதாரிகளின் விண்ணப்பங்கள்

வியாழன், 21 டிசம்பர் 2017 (14:15 IST)
கூட்டுறவு சங்கங்கள் நடத்தும் ரேஷன் கடை விற்பனையாளர் பணிக்கு, இன்ஜினியரிங் பட்டதாரிகள் பலர் விண்ணப்பித்துள்ளனர். 
தமிழகத்தில் இயங்கிவரும் 32,000 ரேஷன்  கடைகளில் 4,000 விற்பனையாளர் மற்றும் எடையாளர் பணி காலியாக உள்ளது. இதற்கான தேர்வுகளை கூட்டுறவு சங்கங்கள் நடத்த உள்ளன. இந்த பணிக்கான விண்ணப்பங்கள் மற்றும் நேர்காணல் அந்தந்த மாவட்ட கூட்டுறவு சங்க இணை பதிவாளர் அலுவலகத்தில் நடக்கின்றன. இதற்கான கல்வித் தகுதி பிளஸ் 2 தேர்ச்சி அல்லது அதற்கு நிகரான கல்வித் தகுதி இருந்தாலே போதும். ஆனால் தற்பொழுது ரேஷன் கடைகளில் இருக்கும் காலிப்பணியிடங்களுக்கு, இன்ஜினியரிங் பட்டதாரிகள் பலர் விண்ணப்பித்துள்ளதாக மாவட்ட இணை பதிவாளர் கூறியுள்ளார்.
 
ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஓராண்டு வரை தொகுப்பு ஊதியமாக, மாதம் 5,000 ரூபாய் வழங்கப்படும். ஓராண்டிற்கு பின், அதிகபட்சமாக, 12 ஆயிரம் ரூபாயும், அதனுடன் ஆண்டுக்கு, 2.5 சதவீதம் ஊதிய உயர்வும் அளிக்கப்பட இருக்கிறது. ஆனால் அரசு ஊழியருக்கு இணையான சம்பளம்  அவர்களுக்கு வழங்கப்பட மாட்டாது. இச்சம்பவம் இன்ஜினியரிங் பட்டதாரிகளின் வேலையின்மையை எடுத்துக் காட்டுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்