300 தனியார் பொறியியல் கல்லூரிகளை மூட ஏஐசிடிஇ(AICTE) முடிவு

சனி, 2 டிசம்பர் 2017 (18:19 IST)
வரும் கல்வியாண்டில் நாடு முழுவதும் குறைந்த மாணவர்கள் சேர்க்கை உள்ள முதல் 300 தனியார் பொறியியல் கல்லுரிகளை மூட ஏஐசிடிஇ முடிவு செய்துள்ளது.
30 சதவீதத்திற்கு மேல் மாணவர்கள் சேராத பொறியியல் கல்லூரிகளை மூட அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் முடிவு செய்துள்ளது. இதன் அடிப்படையில் இந்தியா முழுவதும் உள்ள 300க்கும் மேற்பட்ட தனியார் பொறியியல் கல்லூரிகளில், வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்க வாய்ப்பு இருப்பதாக அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் (ஏஐசிடிஇ) தெரிவித்துள்ளது.
 
இது தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், நாடு முழுதும் 3 ஆயிரம் தனியார் பொறியியல் கல்லூரிகள் உள்ளது. அதில் 300 கல்லூரிகளில் தொடர்ந்து 5 வருடங்களாக 30 சதவீதத்திற்கு கீழ் மாணவர் சேர்க்கை பதிவாகி இருப்பதால், அக்கல்லூரிகளுக்கு அடுத்த 2018 - 2019 கல்வியாண்டில் தடைவிதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் அக்கல்லூரிகளை கலை அறிவியல் அல்லது தொழில்படிப்பு கல்லூரிகளாக மாற்றி கொள்ளும்படி அறிவுரை வழங்கப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்